கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் – முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வு!

கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றையதினம் (26-04-2023) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர்; தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை மற்றும் மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் விவசாய நடவடிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு 2023 ஆண்டுக்கான அனைத்து விவசாய திட்டங்கள் மற்றும் செயற்படுத்தல் என பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கைமற்றும் , ஏனைய உபஉணவு பயிர்ச்செய்கை , வீடுத்தோட்டம், விலங்கு வளர்ப்பு முதலிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 2023 ஆம் ஆண்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|