கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதனால் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Tuesday, December 27th, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதக்கீடு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு ரூபா 10 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மடிக்கணணிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த உதவி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர் திரு க. முருகவேல் தலைமையில் நேற்றையதினம்  (26) கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

image-0-02-06-245956e4b19a2a9422acc956644a6048fd1efe42bf761213f7eb8641cba3ceb6-V

இதன்போது 80 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை பாதணி அப்பியாசக்கொப்பிகள் உட்பட்ட பொதிகளும் 19 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் 7 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

image-0-02-06-a86a1962011c0393f1ac1b4c23d1cfc1bde94ffd84bfd0d2e2cdc6138a8ef756-V

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு மேற்படி கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் தவநாதன் அவர்கள் உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இருக்கும் ஒரே கலங்கரைவிளக்கு கல்வியே என்றும் கல்வி இல்லாமல் எந்தவொரு சாதாரண தொழிலையும் செய்யமுடியாது என்றும் ஏற்பட்டுவிட்ட உலக மயமாகலில் இன்று பூகோளமே ஒரு கிராமம் போன்று ஆகிவிட்ட நிலையில் அதற்கேற்ப எமது மாணவர்களும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களும் பெற்றோர்களும் ஆங்கிலம் அறிவியல் தகவல்தொழில்நுட்பம் போன்ற பாடங்களில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

image-0-02-06-5580a6f888e07edab81584354ccc6f4875f1d28a8fe493a1eeac2a6188fa3971-V

மேலும் எதிர்காலத்தில் மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றி தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களிற்கு ஊக்குவிப்பு உதவித்திட்டங்கள் செயற்படுத்த இருப்பதாகவும் கல்விக்கான உதவி தேவைப்படுவோர் தன்னை தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் உதவி கல்வி பணிப்பாளர்கள் வலயக்கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள்  மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

image-0-02-06-42d20001f2c68caf7c3c84eafd34e1828ca41b89d50a1c82a239049f429628fd-V

image-0-02-06-9d95b920b5c9d0118ecc667ad26a9f7ab86260dd96af0df7a32a572e16d5171e-V

image-0-02-06-b05184fa8ba520f4ecf9aa8af41879541944a4a742d2415d6cccfe47088230b5-V

image-0-02-06-b12a895da9b2fe9212cdabdb959ad6d63b42363fd4fe090494793eca8bf1d505-V

image-0-02-06-ac1e86933bfcfa84f35b7aa92c25bb809368a86390a036f4850a9fe5f3b12dbb-V

Related posts: