கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவருக்கு பன்றிக் காய்ச்சல்  – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, February 19th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பவதிகள் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே கிளிநொச்சிப் பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் மிக விரைவாகப் பரவி வருவதை உணர்ந்து கொண்டு மக்கள் கூடும் இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பேருந்துப் பயணங்கள், புகையிரதப் பயணங்களை தவிர்ப்பதாலும், இந்த நோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தலை தவிர்ப்பதனாலும், கர்ப்பவதிகளை இந்த நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண வைரஸ் காய்ச்சலிலிருந்து இந்த H1N1 வைரஸ் காய்ச்சலினை வேறாக பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வுகூட மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக்கண்காணிப்புமே H1N1 வைரஸ் காய்ச்சலினை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவசியமாகும்.

நோயின்அறிகுறிகள்

சளிக்காய்ச்சல், தடிமன், தொண்டைப்புண், சளி, தலையிடி, உடல் வலியுடன் அதிகூடிய காய்ச்சல், மூச்சுவிட முடியாமை, நெஞ்சு வலி, மறதிக்குணம், நெஞ்சுப்படபடப்பு, வலிப்பு,வயிற்றோட்டம். போன்ற அறிகுறிகள் காணப்படும் எனவே தற்போதைய சூழலில் அலட்சியமாக இருந்து விடாது உடனடியாக உரிய சிகிசையை பெற்று உயிராபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அவசர அறிவித்தலை விடுத்துள்ளனர்.

2-55

Related posts: