கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Saturday, March 19th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
செல்வா நகரில் மூன்று வீடுகளும், கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
மேலும் பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு சுகாதார வழிகாட்டல் விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - சபை அம...
அரச துறைக்கு 2024 ஆம் ஆண்டுமுதல் முறையான மதிப்பீட்டு நடைமுறை அறிமுகம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான...
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு - இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ...
|
|
|


