கிளிநொச்சியில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் மீட்பு!

Monday, January 2nd, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் மூன்று இலட்சத்து 401 வரையிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக கண்ணி வெடி செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை அகற்றி பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான பகுதியாகவும் வெடிபொருட்கள் நிறைந்த பகுதியாகவும் காணப்படும் முகமாலை பகுதியில் தொடர்ந்தும் வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

முகமாலைப்பகுதியில் இன்னும் பதினொரு சதுர கிலோமீற்றரில் வெடி பொருட்கள் அகற்ற வேண்டிய பகுதியாக காணப்படுகின்றது.கிளாலி தொடக்கம் நாகர் கோவில் வரைக்குமான பகுதிகள் மிக ஆபத்தான பகுதியாக காணப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை ஆகிய பிரதேச செயலகங்களில் உள்ள பகுதிகளில் அடையாளங்காணப்பட்டு மனிதநேய தொண்டு நிறுவனங்களினால் இதுவரைக்கும் மூன்று இலட்சத்து 401 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.

சுமார் ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 270 வரையான மிதி வெடிகளும், 505 வரையான அதிசக்தி வாய்ந்த கவசஎதிர்ப்பு மிதிவெடிகளும், இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்து 626 வரையான மிக ஆபத்தான விளைவை தரக்கூடிய வெடிக்கும் நிலையில் காணப்படும் எறிகனைகள், கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்ட வெடிபொருட்களில் உள்ளடங்குவதாக மாவட்ட செயலக கண்ணி வெடி செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது

201507311653204915_Huge-cache-of-explosives-recovered-in-Bihar_SECVPF

Related posts: