பூர்வீக இடத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

Tuesday, May 2nd, 2017

தமதுபூர்வீக இடத்திற்குசெல்லவும்,தங்கிநின்றுதொழில் புரியவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சிபூநகரியின் இரணைதீவுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைஆரம்பித்துள்ளனர்.

சர்வதேசதொழிலாளர் தினமாகியநேற்றையதினம் முதல் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைஆரம்பித்துள்ளனர்.

நாட்டின் அசாதாரணசூழ்நிலைகாரணமாக 1992 ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தமக்கள் முழங்காவில் இரணைமாதாநகரில் இற்றைவரைபல்வேறு இடர்பாடுகளுக்குமத்தியிலவாழ்ந்துவருகின்றனர்.

யுத்தம் நிறைவுக்குவந்ததன் பின்னர் தமதுபூர்வீக இடத்தில் தம்மைமீளக்குடியேற்றுமாறுமக்கள் தொடர்ச்சியாககோரிக்கைவிடுத்துவந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சிமாவட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைவர்கள் இரணைதீவிற்குசெல்வதுஎனதீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும், இதற்குகடற்படைஅனுமதிக்கவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தற்போது இரணைமாதாநகரில் வாழ்ந்தவரும் இரணைதீவுமக்கள்; விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அண்மையில் இரணைமாதாநகருக்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா கடற்படையின் அனுமதியுடன் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு இரணைதீவுக்கு சென்றுநிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து அறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலுள்ள மாணவர்க்கு கைத்தொலைபேசிகள் : அமைச்சர் பீரிஸ் நடவடிக்கை!
இந்த ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது - அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்...
ஒன்லைன் கடவுச்சீட்டு - சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந...