கிளிநொச்சியில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக் கூடக் கண்காட்சியும்!

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக் கூடக் கண்காட்சியும் கிளிநொச்சியில் இன்று(06) இடம்பெற்றது.
தமிழ், சிங்கள, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பொம்மலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இன்னியம் உள்ளிட்ட அம்சங்களை தாங்கியவாறு கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன ஊர்தி பேரணி ஆரம்பமாகி விழா மண்டபத்தை வந்தடைந்ததுடன் அங்கு விசேட கலை நிகழ்வுகளும் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் உயர் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கிறது வ...
கடந்த ஆண்டை விடவும் 2023 ஆம் ஆண்டுப் புத்தாண்டு சுமூகமாக அமைந்துள்ளது – மேலும் சிறப்பானதாக அனைவரும் ...
பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு சேவை காலத்தை மேலும் நீடிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி!
|
|