கிளங்டன் வைத்தியசாலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார்!
Saturday, May 6th, 2017
சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்கும் பொருட்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் இவ்வாண்டு இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில், இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையில் இரண்டு நாள் பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஎதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ளார்.
இதனிடையே இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹட்டன் கிளங்டன் வைத்தியசாலையை 12 ஆம் திகதி மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இவருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|
|


