கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மூன்று பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு – அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவிப்பு!
Sunday, October 1st, 2023
இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மூன்று பேர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர், கிரிக்கெட் இடைக்கால குழு தலைவர் சிதத் வெத்தமுனி, ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.
சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட் சபைகளைக் கண்காணித்தல், தொடர்பு கொள்ளல், ஒருங்கிணைத்தல் தொடர்பான பொறுப்புகள் குறித்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பொன்னாலைச் சந்தியில் கட்டி முடிக்காத வீடு ஒன்றைப் பறித்தது பிரதேச செயலகம் -மேலும் பல வீடுகளைப் பறிக்...
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் - இராணுவத் தளபதி தெரிவிப்பு!
நலன்புரி திட்டத்தை பெற நிதி வசூலிப்பு – உடன் நிறுத்தவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு ஈ.பி...
|
|
|


