கிரிக்கட் மீதான தடை – சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை!

Friday, November 17th, 2023

இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இன்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நியமித்தார்.

அமைச்சர்களான டிரான் அலஸ், மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் கட்சி, எதிர்கட்சி பேதங்களை புறந்தள்ள வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

இலங்கை கிரிக்கெட் நெருக்கடி குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடினார் என அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், கிரிக்கெட் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவொன்றுக்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளளார்.

இருப்பினும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மீது எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: