காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடிய ஒருவரே புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!
Wednesday, June 28th, 2023
காவல்துறையில் முன்னுதாரணமானவரும், களங்கமற்றவராகவும், இலங்கை காவல்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடியவருமான ஒருவரே, அடுத்த பொலிஸ் மா அதிபராக இருக்க வேண்டும் என்பதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அந்த சங்கம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
நீதி நிர்வாகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை இன்றியமையாதது என்பதால், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிறந்த ஒருவர் நியமிக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கடல் எல்லைக்குள் அத்துமீறிய 29 இந்திய மீனவர்கள் கைது!
ஐ.நா. பிரதிநிதி இராணுவ அதிகாரியைப் போன்று செயற்படுகின்றார் - அமைச்சர் விஜயதாச ராஜபக்ச!
இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!
|
|
|


