காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Wednesday, August 9th, 2023

காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைக்கான முக்கிய வர்த்தக வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு அடித்தளமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 21ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் விரைவான அபிவிருத்தியை அடைய முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதிஇ அதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீள வேண்டுமானால் போட்டி தன்மை கொண்ட பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும்.

அத்துடன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுவதற்கும் செயற்பட வேண்டும். இதேவேளை, பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் தனியார் துறைக்கும் பொருளாதாரத்தில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: