காலநிலை மாற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அறிவிப்பு!
Monday, November 7th, 2022
ஒரு வாரத்தில் காலநிலை மாற்ற செயலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்
இதற்கு மேலதிகமாக, காலநிலை மாற்றத்தை இலங்கை எவ்வாறு எதிர்கொள்கிறது மற்றும் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எகிப்து விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரமாக உயரும் ? - பிரதமர்
பழிவாங்கல்களுக்கு இலக்கானவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ!
“ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தக்க வருகை - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


