காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு – பில் கேட்ஸ் தெரிவிப்பு!

Monday, December 4th, 2023

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படும் என பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் இணைத் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்தார்.

டுபாயில் நடைபெற்றுவரும் “COP 28” மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் இணைத் தலைவர் பில்கேட்ஸ்க்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்து.

இதக்போதே பில் கேட்ஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு ஏற்கனவே தமது பங்களிப்பைவழங்கி வருகிறது.எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பு மேலும் விரிவுபடுத்தப்படும் .

டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது” என பில் கேட்ஸ் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் உலகளாவிய சவால் மற்றும் வெப்பவலயப் பிராந்தியத்தில் இலங்கையின் பங்களிப்பை மேம்படுத்தல் மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் விவசாயத்திற்கான தரவுக் கட்டமைப்பை நிறுவுவதற்கான முயற்சிகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு அர்ப்பணிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் “COP 28” மாநாட்டில் இலங்கை முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பில்கேட்ஸிடம் தெளிவுபடுத்தியதுடன், உலகிற்கே சவாலாக மாறியுள்ள சுற்றாடல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் பயனுள்ள பங்கை வகிக்க இலங்கை தயாராக இருப்பதாகவும் குதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: