காரைநகரில் காவல் நிலையம் ஒன்றை அமைக்க யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் உத்தரவு !
Saturday, September 29th, 2018
அதிகரித்து வரும் போதைப்பொருளை கட்டுப்படுத்த யாழ்ப்பாணம் காரைநகரில் தனியான காவல் நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊர்காவற்றுறை பிரிவுக்கு பொறுப்பான உதவி காவல் அத்தியட்சகருக்கு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பிரதிப் காவல் மா அதிபர் தலைமையில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர் பிரதேசத்திலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அங்கு இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பிரதேசத்தில் நிரந்தர காவல் நிலையம் இன்மையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனை அடுத்து, காரைநகரில் தனியான காவல்நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு பிரதிக் காவல்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|
|


