காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு – கிளிநொச்சியில் பதற்றம்!

…….
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் மற்றும் இருவர் கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நடனத்தால் யாழ்.பல்கலையில் அடிதடி- மூடப்பட்டது விஞ்ஞானபீடம்!
முக்கிய பிரமுகர்களுக்கும் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களுக்குமிடையில் இரகசிய தொடர்பு!
விரிவான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வருடமாக அடுத்த ஆண்டு பிரகடனம் - நிதியமைச்சர் ரவி!
|
|