காட்டு யானைகளைக் காப்பாற்ற தொலைபேசியில் குறுந்தகவல்!
Monday, December 10th, 2018
தொடருந்தில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் தொடருந்து செலுத்துனர்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று முதல் இந்த திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து பாதைகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தை குறுந்தகவல் மூலம் செலுத்துனர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த தகவல் பரிமாற்றத்திற்கு விசேட வழிநடத்தல் மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
Related posts:
யாழ்.நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகளால் பண்ணைக் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் - ஈ....
வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தலைவர்களிடம்...
|
|
|


