காடுகளை அழித்தால் கடுமையான நடவடிக்கை – ஜனாதிபதி !

Wednesday, October 25th, 2017

காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் வனப் பரம்பலைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் விசேட அவதானத்துடன் செயற்படுவதுடன், அதற்கான அனைத்து செயற்பாடுகளும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

‘புதிய தரைதோற்றங்களில் காடுகள்’ எனும் தொனிப்பொருளில் ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Related posts: