காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

காங்கேசன்துறை மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் நேற்றிரவு சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 3 படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மன்னார் கடற்பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!
2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம் வெளியானது
இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்கா உதவி - அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!
|
|