கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

Saturday, June 3rd, 2017

”கவிக்கோ” அப்துல் ரகுமான் தனது 80 ஆவது வயதில் சென்னையில் காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கவிக்கோ அப்துல் ரகுமான் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையிலுள்ள அவரின் வீட்டில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

1937 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த அப்துல் ரகுமான், 1960 ஆம் ஆண்டிற்கு பின்னர் கவி உலகிற்குள் பிரவேசித்தார்.

புதுக்கவிதைத் துறையில் தடம்பதித்த அப்துல் ரகுமான் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.கவிக்கோ  அப்துல் ரகுமானின் முதலாவது கவிதைத் தொகுப்பான ”பால்வீதி” கவிதை தொகுப்பு 1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

கவிதைகள் மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். புதுக்கவிதை குறித்த ஆய்வுக்காக சென்னைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று - கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அதிர்ச்சித் தக...
இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் த...
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - எதிர்காலத்தில் மருந்துகளுக்கு தட்டு...