கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பிரித்தானியா உதவி!
Thursday, April 18th, 2019
கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு உதவ பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசுக்கிடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் சுற்றாடலுக்கு பொருத்தமான மின்சார உற்பத்தி வேலைத்திட்டம் பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கழிவுகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் முக்கிய மைல் கல்லாகும். மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தக் கூடிய சகல நீர் மூலங்களும் உயர்ந்தபட்ச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் மின்சார விநியோகம் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக பிரதி உயர்ஸ்தானிகர் கூறினார்.
Related posts:
மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு நான்கு மாத காலஅவகாசம்!
விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் 17 வகையான விதைகள் கண்டுபிடிப்பு!
கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி அறிமுகம்!
|
|
|


