களவுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருடர்களின் மனைவிமார் பொலிஸாரால் கைது!

Saturday, December 1st, 2018

யாழ். தீவுப் பகுதிகளில் பல்வேறு ஆலயங்களில் பொருட்களைத் திருடி வந்த நபர்களின் மனைவிமார் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன்மார் தப்பிச் சென்றுள்ள நிலையில் மனைவிமார்களை இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பாட்டி பகுதியில் உள்ள கோயில் உடைத்து அங்கிருந்த பாடல் ஒலிபரப்பும் கருவிகள், றேடியோ உட்பட்ட 47 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டன.

இதன்போது திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை புளியங்கூடல் பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபா பெறுமதியான எவ்.சட்.மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பிலும் உரிமையாளரினால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்களை நாரந்தனைப் பகுதிக்கு தேடிச் சென்றபோது அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். எனினும் அவர்களின் மனைவிமார் திருட்டுப் பொருட்களை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் திருடிய மோட்டார் சைக்கிள், 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: