கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Saturday, September 23rd, 2023
கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹேமாகம – பிடிபன பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த கல்விபொதுத் தராதர உயர்தரப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் இதுவரையில் 185,118 PCR பரிசோதனைகள் நிறைவு - கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய ...
மாகாணங்களுக்கு இடையில் பொதுப்போக்குவரத்தும் முற்றாக இடைநிறுத்தம் - இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொ...
இன்றுமுதல் அனைவருக்கும் "பூஸ்டர்" தடுப்பூசி கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்...
|
|
|


