கல்வி நிர்வாக சேவையில் 800 வெற்றிடங்கள் – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்களுக்கு வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்களுக்கு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கமைய அவ்வெற்றிடங்களுக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும்.
இதேவேளை அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின் படி இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாராளுமன்றம் இன்று கூடுகின்றது!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரானார் வடக்கின் மன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் – ஜனாதிபதியின் ப...
நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடற்கரையோரப் பிரதேசங்களில் முதலீடு செ...
|
|