கல்வி நடவடிக்கைகளை மே 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பில் மீள் ஆலோசனை – கல்வி அமைச்சர் அறிவிப்பு?

கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளிகள் திடீர் அதிகரிப்பை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை மே 11 இல் மீளவும் திறப்பது தொடர்பில் அரசாங்கம் மீள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தற்போதைய நிலையில் பாடசாலைகளையும், பல்கலைக்கழகங்களையும் திறக்கும் திகதி சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பல்கலைக்கழகங்களில் கல்விசார் பணியாளர்களின் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி இணையம் மூலமான கவ்விச்செயற்பாடுகள் முக்கியமானவை என்றும் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்
Related posts:
60 ஏக்கர் வனப்பகுதி தீயினால் அழிவு!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டம் - சுகாதார அமைச்சர் ...
|
|