கல்வி அமைச்சின் தகவல்களை வழங்குவதற்கான புதிய பொறிமுறை
Friday, April 21st, 2017
தகவல் சட்டத்திற்கு அமைவாக கல்வியமைச்சில் தகவல்களை கோருவது தொடர்பிலான மதிப்பீட்டுக்குழு ஒன்று அமைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இந்த குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சில் இது தொடர்பிலான தகவல்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் மூலம் அல்லது கல்வியமைச்சின் இணையத்தளத்தின் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும். கல்வி அமைச்சின் தகவல்களை வழங்கும் அதிகாரியாக மேலதிக செயலாளர் எச்.ஏவகே நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல்கள் கோரும் மதிப்பீட்டுக்குழுவின் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல்கள் கோரும் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் கலந்துகொண்டார்
Related posts:
இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவுக்கு ஈ.பி.டி.பி. நிதி உதவி!
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவ...
கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும் - இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் வலியுறுத்து!
|
|
|


