கல்வி அமைச்சால் மூவரடங்கிய குழு நியமிப்பு!
Thursday, February 7th, 2019
2019 ஆம் ஆண்டு தேசிய பாடசாலைகளுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது அநீதி இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவை தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி கல்வி அமைச்சின் செயலாளர் பத்மஸ்ரீ ஜயமான்னவினால் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலகவின் தலைமையில் மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பாடசாலை விவகார பணிப்பாளர் காமினி பெரேரா மற்றும் கல்வி அமைச்சின் ஒழுக்காற்று விசாரணை கிளையின் சிரேஷ்ட உதவி செயலாளர் சமனி விக்கிரமதிலக ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
புதிய அரசியல் அமைப்பு தொடர்பான அறிக்கை வரும் இரு மாதங்களுக்குள் - பிரதமர்!
தடுப்பூசி செலுத்தும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!
ஒன்லைன் ஊடான வியாபாரங்களை ஒழுங்குமுறைப்படுத்த புதிய பொறிமுறை!
|
|
|


