கல்வியியல் கல்லூரி மாணவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!
Wednesday, November 30th, 2016
கல்வியியல் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
3,500 ரூபா கொடுப்பனவு 4,000 ரூபா வரையும், 4,000 ரூபா கொடுப்பனவு 5,000 ரூபா வரையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் 5,000 ரூபாவிலிருந்து 6,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் 19 கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சிக்கென 4,065 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 2014ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர்.
நேர்முகப் பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. புதிய மாணவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் கல்வியியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


