சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Sunday, April 7th, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “ஜூன் மாதத்திற்குள் மூன்றாவது தவணையை எதிர்பார்க்கிறோம். அதுதான் நிலையான நடைமுறை.

கடன் மறுசீரமைப்பிற்கு பின்னர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையே ஊழியர்கள் நிலை ஒப்பந்தம் உள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை முன்வைப்பதற்கான திகதியை சர்வதேச நாணய நிதியம் தீர்மானிக்கும்.

இதற்குப் பிறகுதான் மூன்றாவது தவணையாக 337 மில்லியன் டொலர்களைப் பெறமுடியும். ஆனால் அதற்கு முன் நாம் முடிக்க வேண்டிய பணி ஒன்று உள்ளது.

அதாவது கடனை மறுசீரமைப்பதற்கான ஒருமித்த கருத்தை எமது கடனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுமு; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: