கல்வியியல் கல்லூரிகளுக்கு 8000 மாணவர்கள் இணைப்பு!
Monday, January 21st, 2019
கல்வியியல் கல்லூரிகளுக்கு இம்முறை 8 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
இம்மாத நடுப்பகுதியில் இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுமென ஆசிரியர் கல்வி பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் ஒரேமுறையில் இம்முறை இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு ஒரே முறையில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாள்வெட்டில் ஈடுபட்ட இளைஞனுக்கு மோட்டார்ச் சைக்கிள் வாங்கிக் கொடுத்த சித்தி கைது!
நாகவிகாரை சுற்றுமதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த "பிக்கப்" வாகனம் மேதி விபத்து!!
பெரிய வெங்காய அறுவடை ஆரம்பம் - உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை!
|
|
|


