கல்வியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை!

கல்வியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதுடன் மாணவர்கள் ஜனவரி மாதம்முதல் கல்லுரிகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்னர் என்று ஆசிரியர் கல்விக்குப் பொறுப்பான ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்தார்.
50 சதவீதமான மாணவர்கள் திறமை அடிப்படையிலும், ஏனைய 50 சதவீதமானோர் பிரதேச செயலாளர் மட்டரீதியிலும் தெரிவு செய்யப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிருந்து நான்காயிரத்து 65 பேர் கல்வியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் ஆணையாளர் தெரிவிதார். கூடுதலானோர் ஆரம்ப கல்விப் பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
Related posts:
யாழில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் மங்கள சமரவீர!
சிரியக் கொலையைக் கண்டித்து வடக்கில் போராட்டம்!
கொரோனா வைரஸ் எதிரொலி: பொருளாதாரம் மிக மோசமான பின்னடைவு - உலக வங்கி!
|
|