யாழில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் மங்கள சமரவீர!

Monday, August 29th, 2016

கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவையினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழில் ஆரம்பித்து வைத்தார்.

வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் இந்த நிகழ்வு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பிக்கப்பட்ட இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் இந்த நடமாடும் சேவையில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் பங்குபற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலர் பிரிவினரால், வழங்கப்படும் சர்வதேச தேவைகளுக்காக ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதற்கான தேவைகளை உடைய பொதுமக்களுக்கான ஆலோசனைகளும் வழிகாட்டல் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் பிறப்பு, விவாகம் மற்றும் இறப்புக்களை பதிவு செய்தல், கடவுச்சீட்டு சம்பந்தமான வழிகாட்டல்கள், பல்வேறு கொன்சியுலர் அலுவல்கள், இரட்டை பிரஜாவுரிமை மற்றம் குடியுரிமை பெறுதலுக்குரிய நடவடிக்கைகள் என்பன பற்றிய விழிப்புணர்வுகளையும் சேவைகளையும் வழங்கினார்கள்.

Related posts:

வறிய மக்கள் உழைப்பை சுரண்டும் நிதி நிறுவனங்கள் - வாழ்வின் எழுச்சித் திட்ட பணிப்பாளர் சுட்டிக்காட்டு!
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் எதுவுமில்லை - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெர...