கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவித்தல்!
Thursday, January 27th, 2022
எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் பரீட்சாத்திகளுக்கு இதுவரையில் விண்ணப்பப்படிவம் கிடைக்காவிடின், www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை அண்மையில் வெளியானது.
இதன்படி, எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் மார்ச் 5ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியில் 3 .இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சாத்திகள் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளனர்.
அத்துடன், 2 ஆயிரத்து 438 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரூபாவின் வீழ்ச்சியால் வெளிநாட்டுக் கடன் தொகை பாரியளவில் அதிகரிப்பு!
மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
தலைமன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை - பிரேத பரிசோதனையில் உறு...
|
|
|


