கல்வித்துறையின் தர மேம்பாட்டுக்காக புதிய சட்டதிட்டங்கள் – பிரதமர்!
Thursday, August 2nd, 2018
எந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் பாடசாலைகளுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தில் கல்வி அமைச்சுக்கு எதிராக வழக்குத் தொடுத்து தகைமையுள்ள ஆசிரியர்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் பெற்றோருக்குள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி கிங்தொட்ட ஸாஹிரா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று கட்டங்களைத் திறந்து வைத்து மற்றுமொரு கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
கடந்த காலத்தில் மாணவர்கள் அல்லது பாடசாலைகளின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் வழங்கப்படவில்லை.
மாறாக அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்பவே பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக பாடசாலைக் கல்வி பெரும் பாதிப்புக்கு இலக்கானது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Related posts:
அதிகபயணிகளை ஏற்றிச் சென்றால் அனுமதிப்பத்திரம் இரத்து!
இலங்கை - ரஷ்யா எரிபொருள் சுத்திகரிப்பு பேச்சுவார்த்தை!
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|
|


