உள்ளூராட்சித் தேர்தலுக்கு இலவச அஞ்சல் வசதிகள் – சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதாக பிரதி அஞ்சல் மாஅதிபதி ராஜித கே. ரணசிங்க தெரிவிப்பு!

Tuesday, January 17th, 2023

உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச அஞ்சல் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அஞ்சல் மாஅதிபதி ராஜித கே. ரணசிங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்று நிருபம் சகல மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதிகளுக்கும், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர்கள். அஞ்சல் அதிபர்கள் மற்றம் உப அஞ்சல் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்களையும், கிராம உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு, பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக அஞ்சல் இடப்பட்ட பொதிகளையும், கடிதங்களையும் முன்னுரிமையளித்து முதல் அஞ்சலிலேயே அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்காக வேறு அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்ழுவுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்காகவும் இம்முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை, இந்த இலவச அஞ்சல் வசதி அமுலிலிருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: