கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் – பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்!
Monday, May 20th, 2024
பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வார காலப் பகுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதி குறித்த மாணவர் கையேடு இன்னமும் வெளியிடப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இவ்வாறு மாணவர் கையேடு வெளியிடுவது கால தாமதமாகியுள்ளதோடு,
கையேட்டை வெளியிடாது மாணவர்களை அனுமதிப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என கூறப்படுகின்றது.
மேலும், கையேட்டை அச்சிட்டு வெளியிடுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவை என குறிப்பிடப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீனா, இந்தியா மற்றும் ஜப்பானிடமிருந்து நன்கொடை பெற இலங்கை திட்டம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு...
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டுத் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுப்பு!
சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாக உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்...
|
|
|


