வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவை – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021

வீதி விபத்துக்களில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவையெனப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம் 12 சதவீதமான விபத்துக்கள் பாரவூர்தி மற்றும் டிப்பர் ரக வாகனத்தினால் ஏற்பட்டவையெனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாளொன்றில் விபத்துக்கள் காரணமாக நாட்டில் உயிரிழப்பவர்களில் 40 சதவீதமானவர்கள் உந்துருளிகளில் பயணித்தவர்கள் என்பதுடன், 30 சதவீதமான பாதசாரிகளும், 9 சதவீதமான துவிச்சக்கரவண்டி செலுத்துனர்களும் மரணித்துள்ளனர்.

அத்துடன், 47 சதவீத விபத்துக்கள் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்றவையெனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அடையாளம் காணப்படாத விபத்துக்களில் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோருக்கான இழப்பீட்டை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

000

Related posts: