கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் அதிகாரபூர்வமாக்கும் யோசனை தொடர்பில் அரசாங்கம் இன்னும் கவனம் செலுத்தவில்லை – இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவிப்பு!

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் அதிகாரபூர்வமாக்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள யோசனை தொடர்பில், அரசாங்கம் இன்னும் கவனம் செலுத்தவில்லை என்று மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
குறித்த யோசனை தனது அமைச்சில் முன்வக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் குறித்த நிறுவனங்களை மீண்டும் அழைப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்துக்கு சார்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொடவினால் தனிநபர் பிரேரணையாக இந்த யோசனை முவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
இந்த யோசனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளதுடன், விரைவில் குறித்த யோசனை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் இது தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து அதன் சட்ட வரிதாக்கல் தன்மை குறித்து ஆராய்ந்ததன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களமே அதனை சட்டமாக வெளியிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் சபாநாயகரினால் சகல கட்சி தலைவர்களையும் உள்ளடக்கும் வகையில் நியமிக்கப்பட்டு, அதன் பின்னர் இந்த சட்ட மூலம் தொடர்பில் கலந்தாலோசிக்கபடவுள்ளதாக்கவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த செயற்பாடுகளுக்கு நீண்ட நாட்கள் தேவைப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|