கலாசார விழுமியங்களை அழியாது காக்கவேண்டும் – யாழ்.மாவட்ட செயலாளர்!
Saturday, November 19th, 2016
எமது நாட்டில் விழுமியங்கள் அழிந்து போகாமல் பாதுகாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு எமது கலாசாரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு யாழ்.மாவட்ட செயலர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வலி.மெற்கு பிரதேச சபையும் கலாசாரப் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த கலாசாரப் பெருவிழா அண்மையில் சங்கானை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர் உரையாற்றினார்.
அவர் தெரிவித்ததாவது:
இந்தப் பெருவிழா மூலம் எமது இளம்கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான ஒரு சந்தர்ப்பத்தை இவ்விழா வழங்குகின்றது. இதன் மூலம் எமது இளைஞர்களும் எமது காலாசாரங்களை அறிந்துக்கொள்ளக்கூடிய வாய்;ப்பு அதிகரிக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகள் இன்றியமையாததாகும். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்குப் போதிய நிதிப்பற்றாக்குறை காரணமாக முழுமையான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது – என்றார்.

Related posts:
பரீட்சைகள் நடைபெறும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
தேர்தலுக்காக துரிதப்படுத்தப்பட்டுள்ள ஒருநாள் அடையாள அட்டை விநியோக சேவை!
நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!
|
|
|


