கறுப்புப் பணம் பிரச்சினை அல்ல; நாட்டில் பணம் இல்லாததே பிரச்சினை – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!
Wednesday, October 6th, 2021
கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பண்டோரா பேப்பரில் உலக செல்வந்தர்கள் கறுப்புப் பணத்தை வைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது அதன்படி விளையாட்டுத் துறையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் நாட்டில் உள்ள சில விளையாட்டுகளில் முறைகேடான இலாபத்தை முதலீடு செய்வதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
கறுப்பு பணம் வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுகிறது என்றும் அனைத்து விளையாட்டு சங்கங்களும் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினை நிதிப் பற்றாக்குறையாகும் என்றும் நாமல் பதில் வழங்கியுள்ளார்.
அனைத்து விளையாட்டு சங்கங்களையும் அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடுமாறு நாமல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


