கறவை பசுக்களை நிழலில் கட்டிவைக்கவும் – மில்கோ நிறுவனம் வலியுறுத்து!

கறவை பசுக்களை எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நிழலான இடங்களில் கட்டி வைக்குமாறு மில்கோ நிறுவனம் கோரியுள்ளது.
இன்றும் நாளையும் கடும் வெப்பமான வானிலை நிலவுவதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், கிழக்கு, வடமத்திய, தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, குருநாகல் மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு புள்ளி குறைவடைந்ததால் பிள்ளையை கட்டி வைத்து அடித்த தந்தை!
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு: நோயாளர்கள் பெரும் அவதி!
72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம்!
|
|