கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை!

Thursday, February 17th, 2022

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசியை பெறுவதன் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில வகையான பாலியல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆண்மைக்குறைவு அல்லது மலட்டுத்தன்மை போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தடுப்பூசியால் ஏற்படுகின்றன என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: