கன்னிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சி-919 பயணிகள் விமானம்!
Saturday, May 6th, 2017
சீனாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பயணிகள் விமானமான சி-919 தனது முதற்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் ஐந்து விமானப் பணியாளர்களுடன் தனது பயணத்தை ஆரம்பித்த சி-919 பயணிகள் விமானம் 80 நிமிட பயணத்தின் பின்னர் தரையிறக்கப்பட்டது.
மிகப்பெரிய பயணிகள் விமானமாக உருவாக்கப்பட்டுள்ள சி 919 விமானத்தில் 158 பயணிகள் பயணிக்க முடியும். அத்துடன் 5500 கிலோ மீற்றர் பறக்கக் கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Related posts:
தரம் 5 : பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை - பரீட்சைகள் திணைக்களம்!
யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவு - ஒக்ரோபர் 6 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கிறார் ப...
அரியாலை உதயபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடம் – துறைசார் அதிகாரிகள் கள விஜயம்!
|
|
|


