கன்னிச் சேவையை ஆரம்பித்தது நெடுந்தாரகை!

Friday, January 20th, 2017

குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான பயணிகள் சேவைக்காக புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகை பயணிகள் படகு தனது கன்னிப் போக்குவரத்து சேவையை  இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இன்றையதினம் காலை குறித்த படகை மக்களது பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு குறிகட்டுவான் இறங்குதுறையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதிகளாக  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா, இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு நெடுந்தாரகை படகின் மக்களுக்கான சேவையை நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியினூடாக இலங்கையின் படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தினால் 150 மில்லியன் ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட குறித்த பயணிகள் படகு சேவையால் போக்குவரத்தில் பல அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்த நெடுந்தீவு பகுதி மக்களது போக்குவரத்து மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் குறித்த பகுதி மக்களது போக்குவரத்து தேவைகளுக்காக டக்ளஸ் தேவானந்தா அவர்களால் பழுதடைந்த நிலையிலிருந்த குமுதினி படகு மீள் கட்டுமாணம் செய்து கொடுக்கப்பட்டதுடன் வடதாரகை என்றும் படகும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மற்றும் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர பிரதேச நிர்வாக செயலாளர் ரஜீவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

7

1

3

5

2

10

Related posts: