கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு புதிய சோதனை – தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!
Thursday, September 16th, 2021
எதிர்வரும் ஒக்டோபர் மாதம்முதல் கனரக வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் பெற வருவோருக்கு போதை மருந்து பரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் சவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.
கனரக வாகன அனுமதிப்பத்திரம் பெற விண்ணப்பித்த 500 பேரில் 50 க்கும் மேற்பட்டோர் போதை மருந்து பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கனரக வாகனச் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கும் சாரதிகள் மற்றும் காலாவதியான கனரக வாகன அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்க விரும்பும் அனைத்து சாரதிகளும் சிறுநீர் மாதிரிகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன் இந்தச் சோதனைகள் நாடளாவிய போக்குவரத்து மருத்துவ மையங்கள் மூலமும் மேற்கொள்ளப்படும்.
அல்கஹோல், போதைப்பொருள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட மருந்துகளைப் பயன்படுத்திய ஒருவர் இரண்டு வாரங்களுக்குள் சிறுநீரைப் பரிசோதிக்கலாம்.
முதல் சோதனையில் தோல்வியடைந்த ஒருவர் இரு வாரங்களின் பின் இரண்டாவது சோதனையிலும் தோல்வியுற்றால் சாரதிக்கு தகுந்த மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.
.
000
Related posts:
|
|
|


