சில்லறை வியாபாரிகளிடம் வற் வரி அறவிட முடிவு!
Thursday, September 15th, 2016
ஆண்டுதோறும் 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருவாயை ஈட்டும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வற் வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்தே தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளுக்கும் 15 சதவிகித வரி அறவிடப்படவுள்ளதாகவும், சீனி அல்லது வேறு இனிப்பு சார் உள்ளீடுகள் சேர்க்கப்பட்ட பால் மாவிற்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளது.
அதேவேளை வானூர்திப் பயணச் சீட்டுகளுக்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளதாகவும், தனியார் சுகாதார சேவைகளுக்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளதாக அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
பிரெண்டிக்ஸ் கொத்தணிக்கு இன்றுடன் 14 நாட்கள் பூர்த்தி – அடுத்த ஒருவாரம் தீர்மானம் மிக்க காலமாக இருக...
கடலுக்கு சென்றவரை காணவில்லை - நெடுந்தீவில் சம்பவம்!
தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இரண்டொரு வாரத்தில் வெளியாகும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
|
|
|


