கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
Sunday, May 21st, 2023
திருகோணமலை, கந்தளாய் ஆகிய நகரங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டதுடன், அங்குள்ள அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.
மேலும். அங்குள்ள தற்போதைய நிலைவரம் மற்றும் அதன் விஸ்தரிப்புக்கான தேவைப்பாடுகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி தலைவர் டபிள்யூ. எம். எஸ். பீ. விஜேகோன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதி பொது முகாமையாளர் எம். எம். நசீல், உதவி பொது முகாமையாளர் டீ. ஏ. பிரகாஷ், பிராந்திய முகாமையாளர் பீ. சுதாகரன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


