11,125 வர்ணக் குறியீடு இல்லாத பான வகைகள் மீட்பு!

Thursday, August 25th, 2016

நாட்டில் உணவுப் பாதுகாப்பு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் இதுவரை வர்ணக் குறியீடு இல்லாத 11,125 பான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.

இதன்படி நேற்றையதினம் 5116 வர்ணக் குறியீடுகள் இல்லாத பான வகைகள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  இதேவேளை வர்ணக் குறியீடு அற்ற பானங்களை அந்தந்த நிறுவனத்திடமே மீளளித்து விட்டு, குறியீடுடன் கூடிய பானங்களை மட்டும் விற்பனை செய்யுமாறு, வர்த்தகர்களுக்கு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புரை விடுத்துள்ளனர்.

நேற்று நாடுபூராகவுமுள்ள வர்த்தக நிலையங்கள், ஹோட்டல்கள், தூர சேவைக்கான பஸ்கள் நிறுத்தப்படும் தரிப்பிடங்கள் ஆகியவற்றிலுள்ள வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டு, நுகர்வுக்கு தகுதியற்ற 4701 உணவு வகைகள் அழிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதேபோல் 191 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி ஆரம்பமாக உணவு பாதுகாப்பு வாரம் எதிர்வரும் 29ம் திகதி வரை செயற்படுத்தப்படவுள்ளது.

Related posts: