கந்தக்காடு புனர்வாழ்வுமைய விவகாரம் – விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!
Monday, November 7th, 2022
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விரைந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து அங்கிருந்தவர்களில் 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்தனர்.
எனினும் பி;னனர்;, 35 பேர் மீண்டும் புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்களை கண்டறிவதற்காக விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


