கணக்கியல் பரீட்சை: முதற்தடவையாக கணிப்பு பொறிகள் -பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Monday, February 10th, 2020

கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதற்கான அனுமதி வழங்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

கணக்கியல் தொடர்பாக கபொத உயர் தர பிரிவில் பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளது.

அரசசேவைக்கான கணக்கியல் துறைசார் பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் 22ஆம் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: